This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

சருமத்தின் வயதான அறிகுறிகளைக் குறைக்க டீ ட்ரீ ஃபேஸ் டோனர் உதவி செய்யுமா?

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
சருமத்தின் வயதான அறிகுறிகளைக் குறைக்க டீ ட்ரீ ஃபேஸ் டோனர் உதவி செய்யுமா?
Read time5 min

டீ ட்ரீ டோனர் பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். எப்போதும் பயன்படுத்தப்படும் சிகிச்சைகளை பயன்படுத்துவதைத் தவிர மாற்று ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் தோல், நகங்கள் மற்றும் முடியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அதன் அறிகுறிகளைக் குறைக்க டீ ட்ரீ எண்ணெயை பயன்படுத்தலாம். இது மவுத்வாஷ், டியோடரன்ட் மற்றும் பூச்சி விரட்டி போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு தோல் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த டீ ட்ரீ எண்ணெயை சருமத்தில் பயன்படுத்தப்படலாம்.

சருமத்திற்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது?

பல விதமான தோல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய டீ ட்ரீ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. டீ ட்ரீ எண்ணெய் டோனரை பயன்படுத்துவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • டீ ட்ரீ ஃபேஸ் டோனரை ஒரு போதும் சருமத்தில் நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை நீர்த்து போகச் செய்ய ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெய்களுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

  • ஒரு சொட்டு அல்லது இரண்டு சொட்டு டீ ட்ரீ எண்ணெயுடன் 12 துளிகள் கேரியர் எண்ணெயை சேர்க்கவும்.

  • டீ ட்ரீ எண்ணெயை கண்களுக்கு அருகில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். ஏனெனில் இந்த எண்ணெய் கண்களில் படும்போது சிவத்தல் மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.

  • டீ ட்ரீ எண்ணெய் உங்கள் சருமத்தில் எந்த ஒரு எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த முதலில் உங்கள் சருமத்தில் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.

வறண்ட சருமம் மற்றும் எக்சீமா

டீ டீரீ எண்ணெய் வறண்ட சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க உதவுகிறது. எக்சிமாக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் சின்க் ஆக்சைடு மற்றும் குளோபீட்டாசோன் பியூட்டரேட்டை விட இந்த எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

முகத்திற்கான டீ ட்ரீ டோனரை மாய்சரைஸர் அல்லது கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தவும். இந்த கலவையை குளித்த பிறகும், பகல் நேரத்தில் ஒரு முறையும் பயன்படுத்தவும்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் வழியும் சருமத்தை ஆற்ற டீ ட்ரீ எண்ணெயில் காணப்படும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் பயனுள்ளதாக இருக்கும். டீ ட்ரீ எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட சன்ஸ்கிரீனை தொடர்ந்து 30 நாட்கள் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள எண்ணெயை குறைக்க உதவும் என்று 2016 ஆய்வு ஒன்று காட்டுகிறது.

டீ ட்ரீ எண்ணெயை டோனர், மாய்சரைஸர் அல்லது சன்ஸ்கிரீனுடன் பயன்படுத்தவும். டீ ட்ரீ எண்ணெயை பென்டோனைட் களிமண்ணுடன் சேர்த்து ஒரு ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம்

அரிப்பு நிறைந்த சருமம்

டீ ட்ரீ எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு பண்பானது சரும எரிச்சலை ஆற்றுகிறது. மேலும் இது அரிப்பை ஏற்படுத்தும் சரும நோய்களை குணப்படுத்துகிறது.

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, டீ ட்ரீ எண்ணெய் கண் எரிச்சலைப் போக்கும் என்பது தெரிய வந்துள்ளது. பங்கேற்பாளர்களின் கண்களில் 5% டீ ட்ரீ எண்ணெய் லோஷன் பயன்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 24 நபர்களில் 16 நபர்களுக்கு கண் எரிச்சல் குணமானது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 8 நபர்களிடத்தில் இதனை நிரூபிக்க முடியவில்லை.

தினமும் டீ ட்ரீ எண்ணெயை மாய்சரைஸர் அல்லது கேரியர் எண்ணெயுடன் கலந்து சருமத்தில் தடவலாம்.

வீக்கம்

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட டீ ட்ரீ எண்ணெய் வீக்கம் அடைந்த சருமத்தை ஆற்றுகிறது. இது வீக்கத்தை குறைத்து சிவத்தலைப் போக்குகிறது.

நிக்கல் காரணமாக ஏற்படும் சரும அழற்சியை டீ ட்ரீ எண்ணெய் குறைக்கும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் சுத்தமான டீ ட்ரீ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எனினும், இதனை கேரியர் எண்ணெயுடன் நீர்த்து போகச் செய்து பயன்படுத்துவது சிறந்தது.

கேரியர் எண்ணெய் அல்லது மாய்சரைஸர் உடன் ஒரு துளி டீ ட்ரீ எண்ணெய்யை பகல் நேரத்தில் பல முறை பயன்படுத்துங்கள்

தொற்றுகள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள்

ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்ட டீ ட்ரீ எண்ணெய் காயங்களை ஆற்ற உதவுகிறது.

பாக்டீரியாக்களால் ஏற்படும் கொப்புளங்களை டீ ட்ரீ எண்ணெய் ஆற்ற உதவும் என்று 2013 ஆய்வு கூறுகிறது. நிலையான சிகிச்சையுடன் டீ ட்ரீ எண்ணெயை பயன்படுத்திய பத்தில் ஒன்பது நபர்களுக்கு காயங்கள் விரைவாக ஆறுவது தெரிய வந்துள்ளது.

அழகியல்

டீ ட்ரீ எண்ணெய் பொடுகை குணப்படுத்த மாசுக்கள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றுகிறது. டீ ட்ரீ எண்ணெய் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

முகத்தில் டீ ட்ரீ டோனரை எப்படி பயன்படுத்துவது :

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் கேரியர் எண்ணெயை தலைமுடி மற்றும் மயிர்க்கால்களில் தடவவும். 5 சதவீத டீ ட்ரீ எண்ணெய் ஷாம்பு பயன்படுத்தவும். சில நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு பின்னர் முடியை அலசவும்

முகப்பரு

டீ ட்ரீ எண்ணெயில் காணப்படும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் முகப்பருவை குணப்படுத்த உதவும். மேலும் சிவத்தல், வீக்கம் மற்றும் அழற்சி போன்றவற்றை குறைக்கும். அது மட்டும் இல்லாமல் இது முகப்பரு வடுக்களை போக்கி சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் மாற்றும்.

எப்படி பயன்படுத்துவது :

3 துளிகள் டீ ட்ரீ எண்ணெயை 2 அவுன்ஸ் விட்ச் ஹேசலுடன் கலந்து பகல்நேர டோனராக நாள்முழுவதும் பயன்படுத்தலாம். நீங்கள் டீ ட்ரீ எண்ணெய் கொண்ட கிளென்சர், மாய்சரைஸர் மற்றும் ஸ்பாட் சிகிச்சையையும் பயன்படுத்தலாம்.

சொரியாசிஸ்

சொரியாசிஸ்க்கு டீ ட்ரீ எண்ணெய் உதவலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டீ ட்ரீ எண்ணெயானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் சொரியாசிஸ் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்கும் என்பதை நிகழ்வு ஆய்வு ஒன்று காட்டுகிறது.

எப்படி பயன்படுத்துவது :

டீ ட்ரீ எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் பயன்படுத்தவும். இதனை பகல் நேரத்தில் பல முறை தடவலாம்.

இதையும் படிக்கலாமே! - வீட்டிலேயே செய்யக் கூடிய டாப் 10 மேக்-அப் ஹேக்ஸ்

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.